கோலாலம்பூர் , ஜூலை 9-
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடமிருந்து 169 மில்லியன் வெள்ளியைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்ட நடவடிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட தொகையானது மலேசிய ரிங்கிட், பல வெளிநாட்டு பண நோட்டுகள் அடங்கியது என்றும் அது இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.
அவரின் முன்னாள் அரசியல் செயலாளரின் வீட்டில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை எம்ஏசிசி கண்டறிந்து, அதனைப் பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளது.
இந்த வழக்கானது 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வாயிலாக பறிமுதல் செய்ய எம்ஏசிசி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-பொன் முனியாண்டி


