Homeசமூகம்தடுப்புக் கைதி சிவா மரணம் : குடும்பத்தினருக்கு வெ. 560,000 இழப்பீடு! 

தடுப்புக் கைதி சிவா மரணம் : குடும்பத்தினருக்கு வெ. 560,000 இழப்பீடு! 

ஈப்போ, ஜூலை 9-

2017 மார்ச் 30ஆம் தேதி தாப்பா சிறையில் இருந்த 30 வயதான சிவா மரணமடைந்த விவகாரத்தில் அவரின் குடும்பத்தாருக்கு அரசு மொத்தம் 560,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென்று ஈப்போ உயர்நீதிமன்ற நீதித்துறைத் தலைவர் மோசஸ் சுசாவான் உத்தரவிட்டுள்ளார்.

திருட்டுக் குற்றத்திற்கான 8 மாத சிறை தண்டனையை அனுபவித்து பின்னர், அதே நாளில் சிவா மரணமடைந்ததில் சிறைத்துறையின் கவனமின்மையும் அவருக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காமலும் அலட்சியாக இருந்த சிறை வார்டர்களே பொறுப்பேற்க வேண்டுமென்று நீதிபதி கூறினார்.

கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் சிவா வாழும் உரிமையைத் தட்டிப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிவாவின் மரணத்திற்கு இழப்பீடாக அரசு அவரின் குடும்பத்தினருக்கு மொத்தம் 560,000 ரிங்கிட்டை வழங்க வேண்டுமென்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more