Homeகுற்றவியல்பட்டமளிப்பு விழாவில் அமளி: அபராதத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாணவருக்கு அனுமதி   

பட்டமளிப்பு விழாவில் அமளி: அபராதத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாணவருக்கு அனுமதி   

கோலாலம்பூர், ஜூலை 10-

2019 அக்டோபர் 14ஆம் தேதி மலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் துணை வேந்தர் அப்துல் ரஹிம் ஹாஷிம் பதவி விலக வேண்டுமென்ற பதாகை ஏந்தி அமளியில் ஈடுபட்ட மாணவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியது.

இதற்கு முன்னர், அவரின் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அதனையடுத்து, உயர்நீதிமன்றம் அந்த அபராதத்தை 10,000 ரிங்கிட்டாக அதிகரித்தது.

மேலும், துணை வேந்தரின் மீது குறை கூறுவதற்கு மாற்று வழிகள் இருக்கும்போது, அந்த மாணவர் பட்டமளிப்பு விழாவில் அதனை வெளிப்படையாக மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அநாகரிகம் என்று இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

அவரின் மேல் முறையீட்டை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மாணவர் நோங் யான் கெவிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிறுத்தியதோடு, அதனை எதிர்த்து அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முகாந்திரம் இருப்பதால் அவர் அங்கு தமது வழக்கை எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்தது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more