Homeசமூகம்ஆர்சிஐ கோரிக்கை: கட்சியின் கட்டொழுங்கை மீறிய செயலல்ல! 

ஆர்சிஐ கோரிக்கை: கட்சியின் கட்டொழுங்கை மீறிய செயலல்ல! 

கோலாலம்பூர், ஜூலை 14-

அண்மையில் நாட்டில் நிகழ்ந்து வரும் நீதித்துறை சம்பந்தமான நியமனங்கள் மற்றும் அதில் அரசியல் தலையீடு முதலியவற்றை ஆராய அரச விசாரணை ஆணையத்தைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிகேஆரின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அரசுக்கு எதிராகச் செயல்பட்டதோடு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி அந்த 9 பேர் மீதும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அது சம்பந்தமாக விளக்கம் அளித்துள்ள வங்சா மாஜு எம்பி ஸாஹிர் ஹசான், தமது குழுவானது கட்சியின் நற்பெயரைக் காக்கவும் பொதுமக்கள் தொடர்ந்து பிகேஆரின் மீது நம்பிக்கை வைக்கவும், தற்போது நாட்டில் நிகழ்ந்து வரும் நீதித் துறை சிக்கலையும் நீதிபதிகளின் நியமனங்களின் மீது அரசியல் தலையீட்டைக் களையவுமே அரசின் மீது விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டுமென கோரியிருப்பதால் அதனை கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதக்கூடாதென்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், எங்கள் மீது கட்டொழுங்கு நடவடிக்கை என்பது கட்சியின் வரையறுக்கப்பட்ட கட்டொழுங்கு நடைமுறைப்படி நடத்தப்பட வேண்டுமென்றும் அது முறையாக மேற்கொள்ளப்பட்டு கட்சியின் தலைமைத்துவ மன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்றும் ஸாஹிர் வலியுறுத்தியுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more