Homeமலேசியாதலைமை நீதிபதி இல்லாவிட்டாலும்  நீதித் துறை செயல்பாடுகளில் தொய்வில்லை! 

தலைமை நீதிபதி இல்லாவிட்டாலும்  நீதித் துறை செயல்பாடுகளில் தொய்வில்லை! 

கோலாலம்பூர், ஜூலை 15-

நிரந்தர தலைமை நீதிபதி நியமிக்கப்படாவிட்டாலும் கூட்டரசு, மேல் முறையீடு, உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்ற நடவடிக்கைகள் வழக்கம் போல செயல்படுவதாக ஸ்ரீகாண்டி பிகேஆர் தலைவர் நூர்ஹிடாயா சே ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி இல்லாத நிலையை ஒரு பெரிய பிரச்சினையாக சில தரப்பினர் சுட்டிக்காட்டி நீதிமன்றங்களின் நடவடிக்கை ஸ்தம்பித்திருப்பதாக உருவகப்படுத்துவதை அவர் சாடினார்.

தலைமை நீதிபதி இல்லாத நிலையை ஊதிப் பெருக்கி பொதுமக்களிடையே அரசின் மீதான நம்பிக்கையைச் சீரழிக்க யாரும் முனையக் கூடாதென்றும் அப்பதவிக்குத் தகுதியான நபர் அரசமைப்பு விதிகளுக்கிணங்க நிரப்பப்படுவார் என்றும் நூர்ஹிடாயா தெரிவித்தார் .

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more