பெட்டாலிங் ஜெயா, ஜூலை 20-
இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் தங்க கணேசன் அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தங்க கணேசன் இச்சங்கத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார்.
பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48ஆவது பேராளர் மாநாடு மற்றும் தேர்தல் இன்று ஒருசேர நடைபெற்றது.
மொத்தம் 10 பேராளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் மொத்தம் 20 பேர் போட்டியிட்டனர்.
இரு அணிகள் களம் இறங்கின. வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றார்.
இத்தேர்தலில் 2,000திற்கும் மேற்பட்ட பேராளர்கள் வாக்களித்தனர்.
இதில் நடப்பு தலைவர் தங்க கணேசன் 1,102 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
இவரையடுத்து, கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாசன் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள் மற்றும் ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றனர்.
முனைவர் டாக்டர் முரளி 1,031 வாக்குகள், தினகரன் 1,031, கணேஷ் பாபு 1,028 வாக்குகள், டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி கூட்டணி அணி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றி பெற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணி சார்பில் கணேஷ் பாபு, டாக்டர் முரளிதரன் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர்.
மொத்தம் 10 இடங்களில் 8 இடங்களில் தங்க கணேசன் அணியினர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


