கோலாலம்பூர், ஜூலை 18-
தற்போது அனைத்து மலேசியர்களும் கோலாலம்பூர் 29-ஆவது சீ விளையாட்டு (KL2017) போட்டியின் விரிவான ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் மட்டுமின்றி Aஸ்ட்ரோவின் டிஜிட்டல் தளத்திலும் நேயர்களுக்கு நம் நாட்டின் வீரர்களின் ஆட்டங்களைக் குறித்து அதிகபட்சம் பார்க்கும் அனுபவத்தை ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடக்கம் 30-ஆம் தேதி வரை இலவசமாகக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ.
ஆஸ்ட்ரோ (KL2017) போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் என்பதால் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி மற்றும் என்ஜோய் வாயிலாக அலைவரிசை 802, 803, 804 மற்றும் 805 எனும் நான்கு துல்லிய அலைவரிசைகளை வழங்குகின்றது. அதே வேளையில், கூடுதலாக பிரத்தியேகமான நான்கு அலைவரிசைகள் ‘ASTRO GO மற்றும் ‘NJOI NOW செயலிகளின் வாயிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், இலவசமாக 8 அலைவரிசைகளை மடிக்கணினி மற்றும் மொபைல் சாதனங்களின் வாயிலாக அணுகலாம்.
ஆஸ்ட்ரோ விளையாட்டுப் பிரிவின் தலைவர், டத்தோ லீ சோங் வெய் கூறுகையில், ‘இன்றைய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி கண்டு வரும் புதிய ஊடகங்கள், ஆஸ்ட்ரோவின் இலக்கு மற்றும் நோக்கம் விளையாட்டு ரசிகர்களுக்கு நம் நாட்டின் வீரர்களின் போராட்டங்களை மிக அருகில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதாகும்.
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டியை 11.1 மில்லியன் பார்வையாளர்கள் ஆஸ்ட்ரோ அரினா வாயிலாகக் கண்டு களித்துள்ளனர். இதன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, ஆஸ்ட்ரோ பார்க்கும் அனுபவத்தில் உயர்தரமான காட்சிகளைத் தொடர்ந்து வழங்குவதில் கடமைப்பட்டுள்ள வேளையில் இன்றைய டிஜிட்டல் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. இவ்வாண்டு மலேசிய இப்போட்டியை ஏற்று நடத்துவதால், விளையாட்டு ரசிகர்களுக்குத் தொடர்ந்து சிறந்த தரமான நிகழ்ச்சியை வழங்குவதை உறுதிப்படுத்த 300-க்கும் மேற்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முயற்சியின் வாயிலாக, ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் ‘‘ASTRO GO மற்றும் ‘NJOI NOW செயலியின் வாயிலாக ஆஸ்ட்ரோ அரினாவை அணுகலாம் மற்றும் கூடுதல் அலைவரிசைகளை இலவசமாக அணுகலாம். அதுமட்டுமின்றி, அனைத்து மலேசியர்களும் நம் நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் #AyuhMalaysiaKu மற்றும் #KitaSamaHero எனும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்கள், என்றார்.
மற்ற போட்டி விளையாட்டுகளின் ஒளிபரப்புகளை ஒப்பிடகையில் இம்முறை இப்போட்டிக்கான ஆஸ்ட்ரோவின் விரிவான ஒளிபரப்பு முயற்சியைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் பாராட்டினார். ஆஸ்ட்ரோ சீ விளையாட்டு போட்டியின் ஒளிபரப்பு சேவையை வழங்குவது மட்டுமின்றி முதன்மை ஒளிபரப்பு என்பதால் ஒவ்வொரு நாளும் விரிவான ஒளிபரப்பை இ
ரசிகர்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளது, என்றார்.
அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ அரினா அதன் டிஜிட்டல் முயற்சியாக சமூக வலைத்தளத்தில் காற்பந்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ‘TIFO ARENA உடன் இணைந்து சீ விளையாட்டுப் போட்டியைக் குறித்த தகவல்களையும் அங்கு இடம்பெறும் காட்சிகளையும் வழங்கவுள்ளது. விளையாட்டு ரசிகர்கள் www.youtube.com/AstroArena அகப்பக்கத்தை நாடி போட்டியின் நிலவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
ரசிகர்கள் சீ விளையாட்டுக் குறித்த அண்மையச் செய்திகளையும் நம் நாட்டின் விளையாட்டு வீரர்களின் வெற்றியைப் பற்றிய தகவல்களை ‘Stadium Astro மற்றும் ‘Astro Awani எனும் அகப்பக்கங்களை நாடிப் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, ‘Astro Gempak, ‘RojakDaily, ‘Astro Ulagam மற்றும் ‘Astro Xuan அகப்பக்கங்கள் அப்போட்டியைக் குறித்த நிலவரங்கள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் வழங்கப்படும்.
கோலாலம்பூர் 29-ஆவது சீ விளையாட்டு (KL2017) போட்டியின் விரிவான ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, என்ஜோய் மற்றும் ஆஸ்ட்ரோவின் டிஜிட்டல் தளங்களான ‘ASTRO GO மற்றும் ‘NJOI NOW செயலிகளின் வாயிலாகக் காணத் தவறாதீர்கள். மேல் விவரங்களுக்கு www.astro.com.my அகப்பக்கத்தை நாடுங்கள்.
