Homeசமூகம்ஜொகூர்-சிங்கை எல்லையில் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! 

ஜொகூர்-சிங்கை எல்லையில் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! 

ஜொகூர், ஜூலை 22-

தாங்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்த காரணத்தால், சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய தொழிலாளர்கள் தக்க நேரத்தில் வேலைக்குச் செல்லமுடியாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயினர்.

சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திற்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய தொழிலாளர்கள் தக்க நேரத்தில் அக்குடியசுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் நடைபயணமாக சிங்கப்பூருக்கு  வேலைக்குச் செல்ல முயன்ற வீடியோ பதிவுகள் வைரலாகப் வெளியிடப் பட்டுள்ளன.

அண்மையில் அறிவிக்கப்பட்ட சம்பள விகிதத்தில் மாதமொன்றுக்கு 2,800 ரிங்கிட்டாக இருந்த தங்களின் சம்பளம்  2,000 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, மேற்கண்ட வேலை நிறுத்தத்தை பேருந்து ஓட்டுநர்கள் அனுசரித்ததாகச் சொல்லப்படுகிறது.

 

spot_img

latest articles

explore more