Homeமலேசியாநீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்! - அன்வார்

நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்! – அன்வார்

புத்ரா ஜெயா, ஜூலை 22-

நாட்டின் நீதித் துறையின் மாண்பும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும். இந்நிலையில் நாட்டின் வரலாற்றை அறிந்திராமல் மடானி அரசைத் தாக்கி அறிக்கை விடுவதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் பிரபல கேலிச் சித்திரக்காரர் ஸுல்கிப்லீ அன்வார் ஹாக்கின்(சூனார்) சுய சரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அன்வார், ஒரு காலத்தில் நீதித்துறையை துச்சமாக மதித்து சர்வாதிகார ஆட்சியை நடத்தியோரை நினைவில் வைத்து, தமது ஆட்சியைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனத்தை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

முந்தைய ஆட்சியில் நடந்த அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அரசுக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவை தமது ஆட்சியில் கிஞ்சிற்றும் கிடையாது என்றும் அன்வார் உறுதியாகக் கூறினார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more