அலோர்ஸ்டார், ஆக. 1-
இம்மாதம் 24ஆம் தேதி கெடாவில் திட்டமிடப்பட்டுள்ள சனுசியை பதவி விலகக் கோரும் பேரணியை பக்காத்தான் ஹராப்பான் திட்டமிடவில்லை என்று அக்கட்சியின் மாாநில துணைத் தலைவர் அஸ்மிருல் அனுவார் அரிஸ் கூறினார் .
கெடா மந்திரி பெசார் சனுசி நோர் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று வலியுறுத்தும் அந்தப் பேரணியை செக்ரெடியட் சுவாரா அனாக் கெடா என்ற அமைப்பு நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் பேரணியானது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலோர் ஸ்டாரில் உள்ள கெடா மந்திரி பெசார் அலுவலகமான விஸ்மா டாருல் அமான் கட்டடத்திற்கு முன்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் டிக் டோக் வலைத்தளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-பொன் முனியாண்டி