புத்ரா ஜெயா, ஆக. 23-

வங்காளதேச மாணவர்கள் மலேசியாவில் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் 10,000 பேருக்கு மாணவர்  அனுமதி வழங்க தாம்  இணங்கியிருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை   உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ஸம்ரி அப்துல் காதர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தாம் அண்மையில் வங்காளதேசத்திற்குச் சென்றபோது இது தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் அந்நாட்டோடு செய்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ஆகையால், அக்கூற்றில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற ஒப்பந்தத்தை ஸம்ரி காடிர் செய்து கொண்டிருப்பதாக ஹாயிம் ஹில்மான் என்பவர் தமது டிக் டோக் செயலியில் 2 நிமிடம் 19 விநாடிகள் நீடிக்கும் காணொளி பதிவில் வெளியிட்டது பொய்யான குற்றச்சாட்டு என்றார் ஸம்ரி.

-பொன் முனியாண்டி