Homeசமூகம்சமூகம்தேசிய தின சின்னங்களுக்கு  வெ.8.4 மில்லியன் செலவா?

தேசிய தின சின்னங்களுக்கு  வெ.8.4 மில்லியன் செலவா?

கோலாலம்பூர், ஆக.23-

இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி நாட்டிலுள்ள 5.14 மில்லியன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி வடிமைப்பிலான சின்னங்களுக்கு கல்வி அமைச்சு 8.4 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டது தேவையற்ற செலவு என்று பல தரப்பினரும் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேற்கண்ட செலவானது தேவையற்றது என்றும் அம்மாதிரியான சின்னங்களை ஷோப்பி போன்ற இணையதள விற்பனை நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்திருக்கலாம் என்றும் கூறப்பகிறது.

ஷோப்பி அல்லது லஸாடா போன்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு சின்னத்தை 58 சென்னுக்கு வாங்கியிருந்தால் அரசு 3.39 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தியிருக்க முடியும் என்று சில தொழில்முனைவோர் குறிப்பிடுகின்றனர்.

கல்வித் துறையில் நிலவும் எண்ணற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணத் தவறியிருக்கும் அதன் அமைச்சர் ஃபட்லினா சீடேக் பதவி விலக வேண்டுமென்ற அறைகூவலும் தற்போது விடுக்கப்பட்டு வருகிறது.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more