ஷா ஆலம், அக். 19 – சிலாங்கூர் மாநில அரசின் ISEED திட்டத்தின் கீழ், கோத்தா கெமுனிங் N50 சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆறு இந்தியத் தொழில்முனைவோருக்கு இன்று வணிக உபகரண உதவி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தகுதியான ஒவ்வொரு பயனாளியும் விதிமுறைகள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு RM10,000 வரை மதிப்புள்ள வணிக உபகரண உதவியைப் பெறலாம்.
தொழில்முனைவோரின் வணிக வளர்ச்சி, உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் சிலாங்கூர் மாநில அரசு, ISEED பிரிவு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கோபி ஆகியோருக்கு DUN N50 கோத்தா கெமுனிங் நன்றி தெரிவித்துள்ளது.


