Homeவர்த்தகம்தென்கிழக்காசிய பார்டெண்டர் போட்டியில் இந்தோனேசியாவின் I Wayan Sudiana வெற்றி

தென்கிழக்காசிய பார்டெண்டர் போட்டியில் இந்தோனேசியாவின் I Wayan Sudiana வெற்றி

கோலாலம்பூர்:

HEINEKEN Malaysia மற்றும் Multi Bintang Indonesia இணைந்து நடத்திய பிராந்திய பார்டெண்டர் போட்டி 2026இல், இந்தோனேசியாவின் பாலியைப் பிரதிநிதித்துவப்படுத்திய I Wayan Sudiana வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

முதன்முறையாக, HEINEKEN Malaysia நிறுவனத்தின் Star Academy மற்றும் Multi Bintang Indonesia நிறுவனத்தின் Heineken® Star Quality Programme ஆகியவற்றின் சிறந்த பார்டெண்டர்கள் நேருக்கு நேர் போட்டியிட்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டி, தென்கிழக்காசிய விருந்தோம்பல் துறையின் தரத்தை உயர்த்துவதுடன், பார்டெண்டர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கும் இரு நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டியது.

HEINEKEN Malaysia நிறுவனத்தின் விற்பனை இயக்குநர் Roderick van den Brink, சிறந்த விருந்தோம்பல் அனுபவத்தை உருவாக்குவதில் தரமான தயாரிப்புகளுடன் திறமையான பணியாளர்களும் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பார்டெண்டர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், தங்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் பெறவும் இப்போட்டி வாய்ப்பளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மலேசியாவின் Star Academy திட்டம் 2026ஆம் ஆண்டில் புதிய பயிற்சி அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. பயிற்றுநர்கள் நேரடியாகக் கூட்டாளர் விற்பனை நிலையங்களுக்குச் சென்று பயிற்சி வழங்கும் இந்தத் திட்டம், மிரி, பிந்துலு, சண்டகான், அலோர் ஸ்டார் மற்றும் போர்ட் டிக்சன் உள்ளிட்ட நகரங்களையும் புறநகர்ப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட கூட்டாளர் விற்பனை நிலையங்கள் பயனடைந்துள்ளன. 2026ஆம் ஆண்டில் 2,500 பார்டெண்டர்களுக்குப் பயிற்சி அளிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 12,000க்கும் மேற்பட்ட பார்டெண்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும், பார்டெண்டர்களுக்குத் தொழில்நுட்பத் திறன்களுடன் பொறுப்பான மதுபானப் பரிமாறல் குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. சவாலான சூழல்களைக் கையாளுதல், பொறுப்புடன் மதுபானம் அருந்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க ஊக்குவித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

மலேசியாவின் பீர் தொழில்துறை ஆண்டுதோறும் நாட்டின் பொருளாதாரத்திற்கு RM7.1 பில்லியன் பங்களிப்பை வழங்குவதுடன், RM3.3 பில்லியன் வரி வருவாயையும் ஈட்டுகிறது. மேலும், நாடு முழுவதும் 52,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதாகப் பொருளாதாரத் தாக்க மதிப்பீடு தெரிவிக்கிறது.

இப்போட்டியின் இறுதிச்சுற்றில், போட்டியாளர்களின் வேகம், அழுத்தமான சூழலில் துல்லியமாகச் செயல்படும் திறன், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு வழிகாட்டும் திறன் மற்றும் தரமான முறையில் பானங்களை ஊற்றும் தொழில்நுட்பம் ஆகியவை மதிப்பிடப்பட்டன. 2024ஆம் ஆண்டின் HEINEKEN உலகளாவிய Draught Champion பட்டத்தை வென்ற Jason Dennis D’Cruz சிறப்பு நடுவராகப் பங்கேற்றார்.

விருந்தோம்பல் துறையின் தரத்தை உயர்த்துவதுடன், பார்டெண்டர்கள், விற்பனை நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட துறையுடன் தொடர்புடையவர்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க HEINEKEN Malaysia உறுதிபூண்டுள்ளது

spot_img

latest articles

explore more