Homeவர்த்தகம்வேலைவாய்ப்பு மோசடி குறித்து KTMB எச்சரிக்கை; மூன்றாம் தரப்பினரை நியமிக்கவில்லை

வேலைவாய்ப்பு மோசடி குறித்து KTMB எச்சரிக்கை; மூன்றாம் தரப்பினரை நியமிக்கவில்லை

கோலாலம்பூர், அக்டோபர் 20 –

வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் ‘kerjaya.ktmb’ என்ற போலி TikTok கணக்கு குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரயில் நிறுவனம் (KTMB) அறிவுறுத்தியுள்ளது.

KTMB-யின் பெயர் மற்றும் சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறும் இந்தக் கணக்கு, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணியாளர் ஆட்சேர்ப்புப் பணிகளுக்காக எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் நியமிக்கவில்லை என்றும், அதற்கெனத் தனியான சமூக ஊடகக் கணக்குகளையும் உருவாக்கவில்லை என்றும் KTMB தெளிவுபடுத்தியுள்ளது.

சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத வழிகள் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் நிறுவன அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் KTMB எச்சரித்துள்ளது.

வேலைவாய்ப்புகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்த தகவல்களுக்கு www.ktmb.com.my என்ற இணையத்தளத்தையும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக

ஊடகக் கணக்குகளையும் மட்டுமே அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசடி முயற்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல்களைப் பகிர்ந்த சமூக ஊடகக் கணக்கின் உரிமையாளர் Syed Al Hafiz-க்கும் KTMB பாராட்டுத் தெரிவித்துள்ளது.

பொதுமக்களைக் குழப்புவதுடன் அவர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நிறுவன அடையாளத் தவறான பயன்பாடுகள் தீவிரமாகக் கருதப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.

spot_img

latest articles

explore more