Homeகுற்றவியல்10 மாதங்களில் 70,195 சட்டவிரோதக் குடியேறிகள் கைது; 2.43 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்

10 மாதங்களில் 70,195 சட்டவிரோதக் குடியேறிகள் கைது; 2.43 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்

கோலாலம்பூர்:

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் மலேசியக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட 11,808 அமலாக்க நடவடிக்கைகளில் 70,195 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

இக்காலகட்டத்தில் மொத்தம் 155,498 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், குடியேறிகள் தாயகம் திரும்பும் திட்டம் 2.0 (PRM 2.0) மூலம் 328,744 பேர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 243,501 பேர் இத்திட்டத்தின் வாயிலாகத் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மேலும், சட்ட நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய ஆவணப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதே காலக்கட்டத்தில் 52,585 சட்டவிரோதக் குடியேறிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more