திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > எங்கே போனார் துன் மகாதீர்?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

எங்கே போனார் துன் மகாதீர்?

கோலாலம்பூர், நவ. 7-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பினாங்கு மக்களை பார்க்க நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் வராதது குறித்து தேசிய முன்னணியின் ஆதரவு இயக்கமான சமூக சிந்தனை மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் ரமேஷ்ராவ் கேள்வியெழுப்பினார்.

அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் அனைவரும் பினாங்கு மாநிலத்திற்கு சென்றுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கூட இன்று அம்மாநிலத்திற்கு வெள்ள நிலைமையையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட சென்றுவிட்டார். துன் மகாதீர் எங்கே போனார்? எதிர்கட்சி கூட்டணிகளின் தலைவர் என்ற முறையில் துன் மகாதீர்தான் முதலில் பினாங்கு மாநிலத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியிருக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

எதிர்கட்சி தலைவராக அவரால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க முடியவில்லை என்றால் 22 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய பிரதமர் என்ற அடிப்படையில் தனது குடும்பத்தினரின் சொத்திலிருந்து 10 விழுக்காட்டை பினாங்கு மாநில ஜ.செ.க.விடம் வழங்கி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும்.

துன் டாக்டர் மகாதீரின் பிள்ளைகள் பல்வேறு வர்த்தகங்கள் வாயிலாக பில்லியன் கணக்கான சொத்துகளை வைத்திருப்பதால் பெர்சாத்து கட்சியின் தலைவருமான அவர் இந்த உதவியை வழங்குவதில் பிரச்னைகள் இருக்காது. இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அரசியல் பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பினாங்கு மாநில வரலாற்றில் மிக மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள அம்மாநிலத்தை பார்வையிட சென்றுள்ளார் என ரமேஷ்ராவ் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன