வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவிட்சர்லாந்து!
விளையாட்டு

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவிட்சர்லாந்து!

பேசல், நவ.13 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து தகுதிப் பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த பிலே ஆப் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து கோல் ஏதுமின்றி வட அயர்லாந்துடன் சமநிலைக் கண்டது.

எனினும் கடந்த வாரம் நடைபெற்ற முதல் பிலே ஆப் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1 – 0 என்ற கோலில் வட அயர்லாந்தை வீழ்த்தியது.சர்ச்சைக்குரிய பினால்டி கோலின் வழி சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றது. தற்போது சர்ச்சைக்குரிய அந்த கோல் சுவிட்சர்லாந்தை உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளது.

முதல் பாதி ஆட்டத்தில் கோல் போடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தும் சுவிட்சர்லாந்து அதனை நழுவ விட்டது. முதல் ஆட்டத்தில் ஒரு கோலில் வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாவது ஆட்டம் மிகப் பெரிய சவாலாக இருந்தது என சுவிட்சர்லாந்து கோல் காவலர் யான் சோமேர் தெரிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறுவதில் வட அயர்லாந்து தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறது. இம்முறை நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் வட அயர்லாந்து உலகக் கிண்ண வாய்ப்பை இழந்திருப்பதாக அதன் பயிற்றுனர் மார்டின் ஓ நேல் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன