அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட்
முதன்மைச் செய்திகள்

பகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட்

கோலாலம்பூர், ஜூலை.20 –

வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் தேசிய முன்னணி , குறிப்பாக அம்னோவின் கோட்டையாக விளங்காது என எதிர்கட்சி கூட்டணி கூறி வருவது பகல் கனவுக்கு சமமாகும் என பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஷாரிர் சமாட் தெரிவித்துள்ளார்.

பெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் அமைந்துள்ள அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி இழந்து விடும் என பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருந்தார். வழக்கம்போலவே எதிர்கட்சிகள் பழைய கதைகளை மீண்டும் புதுபித்து கொண்டிருப்பதாக ஷாரிர் கூறினார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்ற கதைகளை கட்டவிழ்த்து விடுவது எதிர்கட்சிகளின் வாடிக்கையாகும் என ஷாரிர் கூறினார்.எனினும்  இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பெல்டா நிறுவனம் பயம் கொள்ளாது என ஷாரிர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

பெல்டா குடியேற்றக்காரர்களின் ஆதரவைப் பெற எதிர்கட்சி கூட்டணி மக்களின் மத்தியில் தொடர்ந்து பொய்யுரைத்து வருவதாக ஷாரிர் தெரிவித்தார்.  பெல்டா குடியேற்றவாசிகள் ஒரு லட்சம் ரிங்கிட் கடனில் தத்தளித்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் கோத்தா திங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வெளியிட்டிருக்கும் கூற்றையும் ஷாரிர் சமாட் கடுமையாக சாடியுள்ளார்.

எதிர்கட்சியின் மூத்த தலைவர்களே உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி கொண்டிருந்தால் மக்களின் ஆதரவை எவ்வாறு பெற முடியும் என ஷாரிர் சமாட் கேள்வி எழுப்பினார்.  கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெல்டா நிலத் திட்டங்கள் அமைந்துள்ள 54 நாடாளுமன்றத் தொகுதிகள் எதிர்கட்சி கூட்டணி ஆறு தொகுதிகளை மட்டுமே வென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன