முகப்பு > முதன்மைச் செய்திகள் > 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இழந்த இத்தாலி !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இழந்த இத்தாலி !

மிலான், நவ.14 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வுப் பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டுள்ளது. நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இத்தாலி ஆக கடைசியாக 1958 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவில்லை.

அதன் பின்னர் பங்கேற்ற 14 போட்டிகளில் இத்தாலி இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்றது. 2010, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இத்தாலி குழு பிரிவிலேயே வெளியேறியது. 2006 ஆம் ஆண்டில் நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பது அதன் ரசிகர்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

பிலே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் 0 – 1 என்ற கோலில் சுவீடனிடம் தோல்வி கண்ட இத்தாலி சன் சீரோ அரங்கில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் எழுச்சிப் பெறும் என அதன் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். எனினும் சுவீடன் அணியின் தற்காப்பு பாணியிலான ஆட்டம், இத்தாலிக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

சுவீடன் தற்காப்பு அரணை உடைப்பதில் இத்தாலி தாக்குதல் ஆட்டக்காரர்கள் தோல்வி கண்டனர். பிலே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் அடித்த ஒரு கோலை தக்க வைத்து கொண்ட சுவீடன் 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் கால் பதித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன