Homeமலேசியாவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி உதவியது !

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி உதவியது !

கப்பாளா பத்தாஸ், நவ.14 –

அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட திடீரென்று ஏற்பட்ட வெள்ளம் , மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் மிகப் பெரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அண்மையில் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மைபிபிபி கட்சி உதவிப் பொருட்களை வழங்கியது. வெள்ளத்தில் பல்வேறு உடமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உணவுப் பொருட்களை மைபிபிபி கப்பாளா பத்தாஸ் தொகுதி வழங்கியது.

வெள்ளத்தில் பொருட்சேதத்தை எதிர்நோக்கியுள்ள இந்த குடும்பங்களுக்கு முதல் கட்ட உதவியாக உணவுப் பொருட்களை வழங்கிட தாம் ஆலோசித்ததாக கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவர் மு. வேலாயுதம் கூறினார்.இந்த உதவி ஓரளவு அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அந்த வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களின் வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளில் தொகுதியின் மகளிர் பகுதியுடன் இதர உறுப்பினர்களுடம் தீவிரமாக செயல்பட்டனர்.

spot_img

latest articles

explore more