சென்னை, நவ.14 – 

தமிழ்த் திரையுலகில் 80-களில் ஹீரோயின்கள் ஓராண்டுக்கு 10 முதல் 12 படங்கள்வரை நடித்து வெற்றி வரிசையில் நின்றனர். ராதிகா, அம்பிகா, ராதா, ரேவதி, தொடங்கி, 90-களில் குஷ்பு, பானுப்பிரியா, மீனா, ரோஜா அப்படியே, சிம்ரன் ஜோதிகா என்று சினிமாவில் பிசியாகவே இருந்தவர்கள் இவர்கள். தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பிஸியாக இருக்கம் ஹீரோயின்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

நயன்தாரா,  அனுஷ்கா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, எமி ஜாக்சன், அமலா பால் என சிலரை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களில் மிகவும் சீனியர் நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா மட்டுமே தற்போது ரொம்பவும் பிஸியாக இருக்கிறார்கள்.

நடிப்பில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவின் கைவசம் தற்போது “வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ” ஆகிய நான்கு படங்கள் உள்ளன. 2000-ஆம் ஆண்டில் தனது சினிமா வாழ்வை தொடங்கிய த்ரிஷா “மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 96” ஆகிய நான்கு படங்களில் இன்றும் நடித்து வருகிறார். இந்த இருவருக்குமே வயது 30-தைக் கடந்துவிட்டது என்பது அனைவரும் மறந்த ஒரு தகவல்.

அண்மையில் திருமணமாகி திருமதியான சமந்தா “இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயன் படம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பார்பதற்கு பக்கத்து வீட்டு பெண்போல் இருக்க்லும் கீர்த்தி சுரேஷ் ‘தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2’ படங்களிலும், தமன்னா ‘ஸ்கெட்ச்’ படத்திலும், காஜல் அகர்வால் ‘பாரீஸ் பாரீஸ்’ போன்ற படங்களைக் கையில் வைத்துள்ளனர்.

நடிகைகளின் நடிப்புக்கு மீண்டும் ஒரு பெரிய முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் தமிழ் சினிமா பட்டியலில் வரும் என்று நம்பப்படுகிறது.