Homeமலேசியாவேட்பாளர்களாக நிறுத்தாவிட்டால் குழி பறிக்காதீர்! டாக்டர் சுப்ரா

வேட்பாளர்களாக நிறுத்தாவிட்டால் குழி பறிக்காதீர்! டாக்டர் சுப்ரா

ஈப்போ, நவ.16-

வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பேராக் மாநிலத்திலுள்ள ம.இ.கா. தலைவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படாவிட்டால் கட்சியை புறக்கணிக்கக்கூடாது என அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார்.

இந்த பொறுப்பற்ற செயலின் காரணமாக அம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் மாநில அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்படும். இதனால் கட்சிக்கும் இந்திய சமுதாயத்திற்குமே இழப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.

ம.இ.கா. எதிர்வரும் காலங்களில் சிறப்பாகவும் வலுவாகவும் இருப்பதை உறுதி செய்ய வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படாத தலைவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களின் வெற்றிக்கு ஆதரவளித்தும் கட்சியின் போராட்டத்தைத் தொடர வேண்டும்.

இப்போது குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்கள் களமிறங்கலாம். ஆனால், வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டவுடன் நாம் அனைவரும் ஒரே மனதாக இருக்க வேண்டும். கட்சியை புறக்கணிக்கக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் தொந்தரவு செய்யக்கூடாது என நேற்று பேராக் மாநில ம.இ.கா.வின் தீபாவளி விருந்துபசரிப்பில் உரையாற்றிய போது சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சுப்ரமணியம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மந்திரி புசாரும் மாநில தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் கலந்துக்கொண்டார்.

spot_img

latest articles

explore more