தே.மு. வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்கும் பிரச்னைகளை எழுப்பாதீர்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

0
2

கோலாலம்பூர், நவ. 19-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட தேசிய முன்னணி வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் ஆதரிக்க வேண்டும் என மேலவைத் தலைவரும் ம.இ.கா.வின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ எஸ். எ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் வெற்றியைப் பாதிக்கும் எந்தப் பிரச்னையையும் எழுப்ப வேண்டாம். நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் தலைவருமான டான்ஸ்ரீ நோ ஒமாரின் தலைமையின் கீழ் இருக்கும் மாநில தேசிய முன்னணியை அனைத்து மக்களும், குறிப்பாக இந்திய சமூகத்தினர் ஆதரிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்னணி சிலாங்கூரின் ஆட்சியைத் திரும்ப கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக நேற்று ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தமது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களை சந்தித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.