Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் லீக் - வெற்றியை நழுவ விட்டது லிவர்புல்!

சாம்பியன்ஸ் லீக் – வெற்றியை நழுவ விட்டது லிவர்புல்!

செவியா, நவ.22-

சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்புல் 3 – 0 என்ற கோல்களில் முன்னணி வகித்தும் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. செவ்வாய்கிழமை ஸ்பெயினின் செவியா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் 3 – 3 என்ற கோல்களில் செவியாவுடன் சமநிலைக் கண்டது.

முதல் பாதி ஆட்டத்தில் லிவர்புல் 3 கோல்களில் முன்னணி வகித்தப்போதிலும் இரண்டாம் பாதியில் மூன்று கோல்களை விட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாதியில் ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ இரண்டு கோல்களைப் போட்ட வேளையில் சாடியோ மானே மற்றொரு கோலைப் போட்டார்.

எனினும் இரண்டாம் பாதியில் விசாம் பென் யேடேர் இரண்டு கோல்களைப் போட்டு, கோல் எண்ணிக்கையை 3 – 2 என்ற நிலையில் வைத்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் குயீடோ பிசாரோ போட்ட கோலின் மூலம் செவியா ஆட்டத்தை சமப்படுத்தியது.

இந்த சமநிலை முடிவால் லிவர்புல் ஈ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எட்டு புள்ளிகளுடன் செவியா இரண்டாவது இடத்திலும், ஆறு புள்ளிகளுடன் ஸ்பார்த்தாக் மாஸ்கோ மூன்றாவது இடத்திலும் உள்ளன. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள குழு பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்பார்த்தாக் மாஸ்கோவை வீழ்த்துவதன் மூலம் லிவர்புல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.

spot_img

latest articles

explore more