இரட்டை இலை  ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சியே: முதல்வர் பழனிசாமி பேட்டி!

0
16

சென்னை, நவ.23 –

ஆதாரங்களின் அடிப்படையிலேயே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்நாள் மகிழ்ச்சியான நாளே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் இதுவொரு மகிழ்ச்சியான செய்தியும் நாளும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தி, நியாயமான முறையில் இரட்டை இலை சின்னத்து எங்களுக்கே வழங்கி தீர்ப்பை வழங்கி உள்ளது தேர்தல் ஆணையம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 90 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கமே உள்ளனர். பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் அணிக்கே ஆதரவு அளித்தனர். ஆர்.கே. நகர் வேட்பாளர் குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் கிடைத்தது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தினகரனை எங்களுடன் இணைத்து பேசுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே இனி எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.