Homeவிளையாட்டுயூரோப்பா லீக் - கொலேக்னேவிடம் வீழ்ந்தது அர்செனல்!

யூரோப்பா லீக் – கொலேக்னேவிடம் வீழ்ந்தது அர்செனல்!

கொலேக்னே, நவ.24 –

2017/18 ஆம் பருவத்துக்கான யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் அர்செனல் எச் பிரிவின் வெற்றியாளராக வாகை சூடியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற எச் பிரிவுக்கான ஆட்டத்தில் அர்செனல் 0 – 1 என்ற கோலில் ஜெர்மனியின் கொலேக்னே அணியிடம் தோல்வி கண்டது.எனினும் அர்செனல் எச் பிரிவில் தனது முதல் இடத்தை உறுதிச் செய்துள்ளது.

அதோடு 32 கிளப்புகள் பங்கேற்கும் சுற்றிலும் கால் பதித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வட லண்டன் டார்பி ஆட்டத்தில் களமிறங்கிய அர்செனல் அணியைக் காட்டிலும் கொலேக்னேவுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்வாகி ஆர்சன் வெங்கர் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருந்தார்.

இம்முறை ஒலிவர் ஜீரோட், ஜேக் வில்ஷேர், டேனி வெல்பேக் ஆகியோருக்கு அவர் வாய்ப்பு வழங்கி இருந்தார். எனினும் 62 ஆவது நிமிடத்தில் ஷேரோ குராசி போட்ட பினால்டி கோலினால் அர்செனல் தோல்வி அடைந்தது.

இந்த பருவத்தில் ஜெர்மனி பண்டேஸ்லீகா போட்டியில் எந்த ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெறாத கொலேக்னே, அர்செனலை வீழ்த்தியிருப்பது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியமின் ரெட் ஸ்டார் பெல்கிரேட்டும், பெலரசின் பேட்டே பொரிசோவ்வும் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டது. இதனால் எச் பிரிவில் அர்செனல் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

spot_img

latest articles

explore more