Homeமலேசியாஅனைத்துலக அழகி பட்டத்தை வென்ற முதலாவது மலேசிய இந்திய பெண் ராதிகா பத்துமலை!

அனைத்துலக அழகி பட்டத்தை வென்ற முதலாவது மலேசிய இந்திய பெண் ராதிகா பத்துமலை!

கோலாலம்பூர், டிச. 18-
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக அழகி போட்டியில் இந்திய மங்கையான ரீனா என்று அழைக்கப்படும் ராதிகா பத்துமலை அழகி பட்டத்தை வென்றார்.

ரீனா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மலேசிய அனைத்துலக அழகி போட்டியில் பங்கேற்று அழகி பட்டத்தை வென்றார். அப்போட்டியைத் தொடர்ந்து அனைத்துலக அழகி போட்டியில் பங்கேற்று அந்த பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

உடல் அழகு, இவ்வாண்டுக்கான மாடல் அழகு, நிகரற்ற பங்கேற்பாளர் என பல பிரிவுகளின் அடிப்படையில் அவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார். மேக்ஸ்வேல் இடைநிலைப்பள்ளியில் 6ஆம் படிவத்தை முடித்த ரீனா, நிர்வாகம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ துறையில் இளங்கலை கல்வியை முடித்துள்ளார்.

தனது 20 வயதில் மாடல் துறையில் ஈடுப்பட்டுவரும் ரீனா, இந்த பட்டத்தை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மகுடத்தை வெல்லும் முதலாவது மலேசிய இந்திய பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.  அனைத்துலக அழகியாக தேர்தெடுக்கப்பட்ட ரீனாவிற்கு முன்னாள் அனைத்துலக அழகி மகுடத்தை வென்றவர் மகுடத்தைச் சூட்டினார்.

spot_img

latest articles

explore more