போர்ட்டிக்சன், செப். 15
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டி யிடவிருக்கும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அங்குள்ள இந்தியர்கள் ஆதரவு வழங்குவர் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா பதவி விலகி அன்வார் போட்டியிடும் விவவாகரம் இங்குள்ள இந்தியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அவருக்கு ஆதரவு வழங்க பெரும்பாலானோர் உள்ளனர் என்று பிகேஆரின் தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எம் ரவி தெரிவித்தார்.
போட்டிக்சன் தொகுதி மூன்று தவணைகளாக பிகேஆரின் தொகுதியாக இருந்ததாகவும் இத்தொகுதியில் அன்வார் போட்டியிடுவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் சொன்னார்.
இத்தொகுதியில் மஇகாவைப் பிரதிநிதித்து அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஜி.குமார் அம்மான் போட்டியிட விருப்பம் தெரிவித்தது, இந்தியர்களின் வாக்குகளைப் பிரிக்கும் திட்டமாகும். ஆனால், இந்தியர்கள் இதனை கண்டு ஏமாற மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


