புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பக்காத்தானில் அம்னோ சேர அனுமதியில்லை -துன் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

பக்காத்தானில் அம்னோ சேர அனுமதியில்லை -துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, செப். 15
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் பக்காத்தானுக்கு ஆதரவாகச் செயல்பட விரும்பினாலும் அதனை சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்க்கப்படாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்த லில் போட்டியிடும்போது அதன் பரப்புரைகளில் டத்தோ நஸ்ரி அஸிஸ் கலந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அம்னோ பக்காத்தானுடன் ஒத்துழைக்க விரும்பினாலும் அதனைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்க்கப்படாது. ஆனால், அதன் உறுப்பினர்கள் விருப்பப்பட்டால், தனிப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று இன்று பக்காத்தான் தலைமைத்துவ மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நேற்று நஸ்ரி தமது துணைவியாரின் மூலம், அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான நஸ்ரி, அம்னோ அரசில் இணைந்து கொள்ளும் வகையில் தாம் போர்ட்டிக்சனில் அன்வாருக்கு ஆதரவாகப் பரப்புரைகளில் கலந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன