Homeமலேசியாகிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு பொருளதவி வழங்கியது கப்பாளா பத்தாஸ் மைபிபிபி !

கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு பொருளதவி வழங்கியது கப்பாளா பத்தாஸ் மைபிபிபி !

கப்பாளா பத்தாஸ், டிச.26-

கிறிஸ்மஸ் பெருநாளை அனைவரும் குதுலகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஏழ்மையில் வாழும் மக்களையும் மறந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி இந்த ஆண்டும் 20 பேருக்கு பொருளதவிகளை வழங்கியுள்ளது.  ஆண்டுதோறும் பெருநாள் காலங்களில் வசதி குறைந்தவர்களுக்கு இந்த உதவிகளை வழங்கி வரும் கப்பாளா பத்தாஸ் மைபிபிபி இம்முறை கப்பாளா பத்தாஸ் இந்தியர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்கத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளது.

கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றம், தேசிய முன்னணி வசமிருந்தாலும், அதன் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பாக்காத்தான் ஹரப்பான் வசமிருக்கிறது. இருப்பினும், அரசியல் வேறுபாடின்றி வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் பொருளதவிகளை வழங்குவதை தாம் தவிர்ப்பதில்லை என கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவர் வேலாயுதம் முனுசாமி தமது உரையில் தெரிவித்தார்.

வறுமையில் வாடுபவர்களின்  பெருநாள் மகிழ்ச்சியை ஒரு போதும் பாதித்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பாளா பத்தாஸ் தொகுதியில் மைபிபிபி கட்சி கிறிஸ்மஸ் பொது உபசரிப்பை நடத்தி வருவதுடன் தங்களால் இயன்ற உதவிகளையும் வழங்கி வருவதாக வேலாயுதம் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் சார்பில், கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான செல்வராஜூ கலந்துக் கொண்டார். கப்பாளா பத்தாஸ் மைபிபிபி கட்சி மேற்கொண்டு வரும் சமூகநல நடவடிக்கைகள் என்றும் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொருளதவிகள் வழங்கப்பட்டதுடன், வந்திருந்தவர்களும் உணவும் உபசரிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more