Homeமலேசியாஅப்துல் ரஷிட்டின் கருத்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் !

அப்துல் ரஷிட்டின் கருத்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் !

கோலாலம்பூர், ஜன.1 –

அதிகாரத்தைத் தக்க வைக்க, அரசாங்கத்தின் வளத்தைப் பயன்படுத்த வேண்டும் என பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ரஷிட் ரஹ்மான் தெரிவித்துள்ள கருத்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என இரண்டு அமைச்சர்கள், மலேசியகினி அகப்பக்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

பாக்கத்தான் தலைவர் மன்றத்தில் இடம்பெற்றுள்ள அந்த இரண்டு அமைச்சர்களும் , அப்துல் ரஷிட்டின் கருத்தை சாடியிருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ரஷிட் இத்தகைய கருத்தை பொதுப் பேரவையில் தெரிவித்திருக்கக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு முட்டாள்தனமான கூற்று என சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைப்புத் தொடர்பில் தாம், அப்துல் ரஷிட்டிடம் கலந்து பேசியிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அமைச்சர் கூறினார். ஆனால் அவருக்கு நிறைய விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர் தம்மை பெரிதும் கவரவில்லை என்றும் அந்த அமைச்சர் கூறினார்.

தேர்தல் சீரமைப்பு குழுவிற்கு தலைமையேற்றுள்ள அப்துல் ரஷிட்டின் நிலைக் குறித்தும் பாக்காத்தான் தலைவர் மன்றத்தில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.  பெர்சத்து கட்சியின் இரண்டாவது பொதுப் பேரவையில் அப்துல் ரஷிட் தெரிவித்திருந்த கருத்துக்கு இளைஞர், விளையாட்டு அமைச்சர் சயிட் சாடிக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

spot_img

latest articles

explore more