Homeஅரசியல்தலைமை செயல் அதிகாரியின் மரணத்திற்கு கைத்தொலைபேசி காரணமல்ல -போலீஸ் விளக்கம்

தலைமை செயல் அதிகாரியின் மரணத்திற்கு கைத்தொலைபேசி காரணமல்ல -போலீஸ் விளக்கம்

கோலாலம்பூர், பிப் 26-

கைத்தொலைபேசி வெடித்ததால்  கெரேடல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நஸ்ரின் ஹாசன் மரணம் அடையவில்லை மாறாக தலையில் ஏற்பட்ட காயத்தினால் அவர் மாண்டார் என போலீசார் விளக்கம் அளித்தனர். இரண்டாவது சவப்பரிசோதனையில் இந்த உண்மை கண்டறியப்பட்டதாக  கூறப்பட்டது.

தலையில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் காரணமாகவே அவர் மரணம் அடைந்ததாக  தெரியவந்ததாக போலீசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. கைத்தொலைபேசியின் பேட்டரி வெடித்ததால் அவர் மரணம் அடையவில்லை என்றும் கூறப்பட்டது.

தலையில் ஏற்பட்ட பல காயங்களினால்  நஸ்ரி மரணமடைந்திருக்கிறார். கைத்தொலைபேசி வெடித்ததால் அவரது தலையில் காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேல் நடவடிக்கைக்காக சவப்பரிசோதனை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனை என் இரண்டாவது அறிக்கையை போலீஸ் பெற்றதை சிலாங்கூர் குற்றவியல் விசாரணை துறை தலைவர் உயர் துணை ஆணையர் fadzil அஹமட் உறுதிப்படுத்தினார்.

spot_img

latest articles

explore more