பண்டார் ஸ்ரீபகவான், பிப் 27-
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மையிலுக்கும் புருணை சுல்தான் ஹசானால் பொல்கியாவிற்க்கும் இடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளும் பயனடையும் வகையில் பொருளாதார மற்றும் வர்த்தக துறையில் சில புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் பரிந்துரைகளை மலேசிய வர்த்தக சங்கத்திற்கும் புருணை வர்த்தக சங்கத்திற்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் அடங்கும் என்றும் டத்தோஸ்ரீ வான் அஸிஸா தெரிவித்தார்.
புதிய மலேசிய அரசாங்கத்தின் கீழ் இருவழி உறவை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்வதோடு இதனை வியூகமிக்கதாக திகழ் செய்யும் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.
புருணைக்கு இரண்டு நாள் அதிகார வருகையை மேற்கொண்டு இன்று காலை இங்கு வந்திருந்தார் வான் அஸிஸா.

ஆசியான் நாடுகள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்துவதற்காக வான் அஸிஸா மேற்கொண்ட வருகையின் ஒரு பகுதியே இது என்று கூறப்படுகிறது.
புருணை சுல்தான் உடனான சந்திப்பின் போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் மலேசியா வகுதிருக்கும் கொள்கைகள் குறித்து தாம் தெளிவாக விளக்கமளித்ததாகவும் அவர் சொன்னார்.
மலேசியாவிற்கும் புருணைக்கான உறவு மேம்பாடு கண்டிருப்பதாக புருணை சுல்தான் கூறியதை தாம் ஏற்றுக்கொண்டதாகவும் வான் அஸிஸா கூறினார்.
பிரதமர் துன் டாக்டர் மகாதீரோடு தாம் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக கூறினார். அதே வேளையில் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் 22ஆவது ஆண்டுக்கான தலைவர் பேச்சுவார்த்தையின் போது தாம் அவரை சந்திக்கவிருப்பதையும் சுல்தான் சுட்டிக் காட்டினார்.
இச்சந்திப்பின் போது ரோஹினியா அகதிகளுக்கு உதவுவதில் மலேசியா கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக துணைப் பிரதமர் தெரிவித்தார்.


