Homeகுற்றவியல்வெளிநாட்டு பயணிகளிடம் பணம் பறிப்பு; 8 போலி குடிநுழைவு அதிகாரிகள் கைது

வெளிநாட்டு பயணிகளிடம் பணம் பறிப்பு; 8 போலி குடிநுழைவு அதிகாரிகள் கைது

சிப்பாங், மார்ச் 1-

இங்குள்ள கேஎல்ஐஏ, கேஎல்ஐஏ 2 விமான  நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் போல் வேடமிட்டு வெளிநாட்டு பயணிகளை மிரட்டிப் பணம் பறித்த 8 போலி குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மலேசியர்களான 25க்கும் 57க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த சந்தேகப் பேர்வழிகள் குறீத்த புகார்கள் கடந்த ஆண்டில் பெறப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இவ்வாண்டு கைது செய்யப்பட்டதாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்கிப்ளி அடாம்ஷா தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணிகளிடமிருந்து பணம் பறிப்பதற்கு முன்பு தங்களின் பயண ஆவணங்களை சோதனைக்காக காட்டும்படி அவர்களிடம் இக்கும்பல் கேட்டுக் கொள்ளும் என்றார் அவர்.

“இவர்கள் பொதுவாக பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பயணிகளையே குறி வைத்து பணம் பறித்து வந்தனர் “ என்று அவர் மேலும் கூறினார்.

இப்பேர்வழிகள் பயணிகளிடம் வன்முறையைப் பயன்படுத்தியிருப்பதோடு இப்பயணிகளில் ஒரு சிலர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது,

spot_img

latest articles

explore more