கோலாலம்பூர், மார்ச் 12-
தலைநகர் செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவில் இரத ஊர்வலத்திற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட்டிற்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாதம் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த ஆலய பங்குனி உத்திர விழாவில் இரத ஊர்வலத்திற்கு தடை விதிப்பை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்படுத்தியது.
அது குறித்து கடும் எதிர்ப்பை பக்கதர்களிடையே கிளம்பியது. மேலும் இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனத்தை சிவகுமார் தெரிவித்து இந்த விவகாரத்தில் அமைச்சர் காலிட் சமாட் தலையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வட்டாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக நிகழும் இந்த ஆலய விழாவில் இரத ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. பலரின் கண்டத்திற்கு டிபிகேஎல் இலக்காணது் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய விவகாரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் முன்பு பலரின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்று சிவகுமார் கேட்டுக் கொண்டார்


