Homeஅரசியல்சிறிய மாற்றங்களுடன் அரபு ஓவிய எழுத்து அமல்படுத்தப்படும் –அமைச்சரவை முடிவு

சிறிய மாற்றங்களுடன் அரபு ஓவிய எழுத்து அமல்படுத்தப்படும் –அமைச்சரவை முடிவு

புத்ராஜெயா, ஆக 8-
தமிழ், சீனப்பள்ளிகளில் அரபு ஓவிய எழுத்தை அமல்படுத்தும் விவகாரம் குறித்து ஊடங்கங்களில் வெளியான கருத்துகள் உட்பட அனைத்து கருத்துகளையும் முன்வைத்து நேற்று நடந்த அமைச்சரவையின் வாராந்திர கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதை போலவே சிறு மாற்றங்களுடன் இந்த அரபு ஓவிய எழுத்து தமிழ்,சீனப்பள்ளிகளில் அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக  கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

காட் எனப்படும் அந்த அரசு ஓவிய எழுத்து சில மாற்றங்களுடன் 6 பக்கங்களிலிருந்து 3 பக்கத்திற்கு குறைக்கப்பட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

அதை விருப்பப் பாடமாக மாற்றப்பட்டு அவற்றை வகுப்பில் அமல்படுத்துவதை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடமே ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சரவையின் இந்த முடிவு இனி மக்களிடையே எந்தவொரு குழுப்பத்தையும் ஏற்படுத்தாது என்று கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமைச்சரவையில் இந்த முடிவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

spot_img

latest articles

explore more