Homeஇந்தியா/ ஈழம்தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் சுட்டுக்கொலை; போலீஸ் அதிரடி

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் சுட்டுக்கொலை; போலீஸ் அதிரடி

பெங்களூரு:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் கைது செய்து சேர்லாப்பள்ளி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் கைதான முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது 4 பேரும் தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற காவல் முறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

spot_img

latest articles

explore more