செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சிறுமியை பிணம் என திட்டிய மாற்றான் தாய்; வைரலாகும் வீடியோ
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சிறுமியை பிணம் என திட்டிய மாற்றான் தாய்; வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், டிசம்பர் 6-

இந்திய பெண் ஒருவர் சிறுமியை பிணம் என திட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கூர்மையான ஆயுதத்தை காட்டியவாறு ‘நீ என் பிள்ளை இல்லை, இறந்த பிணத்திற்கு சமம், உன் தந்தையின் வற்புறுத்தலால்தான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன், உறவு என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வராதே’ என அப்பெண் அந்தச் சிறுமியை கடுமையாக திட்டுகிறார்.

இதில் அந்தப் பெண் அச்சிறுமியின் சித்தி என தெரிய வருகிறது.

ஜிஞ்சாங் ஸ்ரீ அமான் பிபிஆர் வீடமைப்பு பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘’அச்சிறுமி துன்புறுத்தப்படுகிறாள், அவளை காப்பாற்றுங்கள்’’ என பதிவு செய்யப்பட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன