கோலாலம்பூர், ஏப். 10-
இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் நாள் மலேசியா வந்தடைந்த 81 பேர் தனிமைப் படுத்தப்பட்ட பின்னர் இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நீலாய் பண்டார் என்ஸ்டிக் உயர்கல்வி தலைமைத்துவக் கழகத்தில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்று காலை 8.00 மணிக்கு அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்ட 75 மலேசியர்களையும் 6 இத்தாலியர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர். அதே வேளையில் சிலர் அக்கழகத்தின் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றனர்.
மருத்துவப் பணியாளர்கள் 5 பேர், ஏர் ஏசியா பணியாளர்கள் 20 பேர், வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் உட்பட தேசியப் பேரிடர் நிர்வாக அதிகாரி ஒருவர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நடமாட அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.


