உலகம் முழுவதும் 2 கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 711 பேருக்கு கொவிட் 19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 11 ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 311 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 936 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 1,94,037 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தாக்கி 1,27,517 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் 73923 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.


