Homeமலேசியாபிற்பகல் 3.00 மணிக்குப் பிறகு 2021 பட்ஜெட் வாக்கெடுப்பு

பிற்பகல் 3.00 மணிக்குப் பிறகு 2021 பட்ஜெட் வாக்கெடுப்பு

கோலாலம்பூர், நவம்பர் 26:-

2021 பட்ஜெட் வாக்கெடுப்புக்காக இன்று நாடாளுமன்றக் கூட்ட நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹஸான் தெரிவித்தார்

கூட்ட விதிமுறை 12 (1) இன் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அமைச்சும் பட்ஜெட் தொடர்பான விவாதத்தை முடித்து இரண்டாம் கட்ட வாசிப்பு நடக்கும் வரை நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் அக்கூட்டம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஒத்திவைக்கப்படும் என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட விவாதத்தை நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் முடித்தவுடன் பட்ஜெட் வாக்கெடுப்பு நடத்தப்பட ஏதுவாக இருக்கும்.

பட்ஜெட் 2021 தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் 9 அமைச்சுகள் விளங்கங்களும் பதில்களும் தர வேண்டியது உள்ளது எனக் கூறப்படுகிறது.

spot_img

latest articles

explore more