Homeஅரசியல்அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு பணியாற்றுங்கள்! - பாலசுப்ரமணியத்திற்கு சிவராஜ் பதில்

அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு பணியாற்றுங்கள்! – பாலசுப்ரமணியத்திற்கு சிவராஜ் பதில்

கோலாலம்பூர், டிச 3

மலேசிய இந்தியர்களின் உரிமைக் குரலாக மஇகா என்றுமே இருந்து வந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியர்களின் நலனுக்காக உழைக்கும் கட்சியாக மஇகா இருக்கின்றது என்பதை பாஸ் கட்சியின் ஆதரவு மன்றத்தின் தலைவர் செனட்டர் பாலசுப்ரமணியம் உணர்ந்து கொள்ள வேண்டுமென டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்டுக் கொண்டார்.

கெடா மாநிலத்தில், மஇகா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநில நிர்வாகத்தில், குறிப்பாக இந்தியச் சமூகத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிடவில்லை

இந்தியச் சமூக விவகாரங்களின் சிறப்பு அதிகாரியாக பி.கே. குமரேசனை, ( டி.எச்.பி.பி தலைவர்) அம்மாநில மந்திரி பெசார் நியமித்தார். இந்நிலையில் இஸ்லாம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் உட்பட சமய விவகாரங்களுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமென மஇகா உதவித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் நினைவுறுத்தினார்.

“ஒரு சிக்கல் ஏற்பட்டபின் அறிக்கையை வெளியிடுவதை வேலையாக வைத்துக் கொள்ளக் கூடாது , இந்தியச் சமூகத்தின் பிரதிநிதியாக மாநில அரசாங்கத்தின் பொறுப்பைப் பயன்படுத்துவதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க முற்படவேண்டும்!”

இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தவறிய பாஸ் கட்சியின் ஆதரவு மன்றத்தை இந்தியர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

நீங்கள் செய்த தவற்றை மறைப்பதற்காக மஇகாவை பகடைக்காயாகப் பயன்படுத்தாதீர்கள். கெடா மாநில இந்தியர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்

அதை விடுத்து வெற்று அறிக்கைகளை செனட்டர் பாலசுப்ரமணியம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென டத்தோ சிவராஜ் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more