கோலாலம்பூர் | ஜூன் 8:-
கடந்த மே 24 ஆம் நாள் நடந்த கேஎல்சிசி எல்ஆர்டி விபத்து குறித்து முழு அறிக்கை நாளை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையை அமைச்சின் தலைமைச் செயலாலர் டத்தோ இஷாம் இஷாக்கின் தலைமையில் 9 பேர் கொண்ட தனிக்குழு உறுவாக்கியுள்ளது என டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொடுக்கப்பட்ட 14 நாட்களில் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுள்ளார். அதற்காகப் பாடுபட்ட அக்குழுவுக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த மே 24 ஆம் நாள் இரவு 8.33 மணிக்கு 213 பயணிகளைக் கொண்ட எல்ஆர்டி இரயிலும் காலியான பழுதடைந்த இன்னொரு எல்ஆர்டி இரயிலும் கேஎல்சிசிக்கும் கம்போங் பாருவுக்கும் ஆன இடைப்பட்டச் சுரங்கப்பதையில் மோதிக் கொண்டன.
அவ்வறிக்கையின் சில முக்கியத் தகவல்ல்கள் குறித்து பதிவிட்ட அமைச்சர், பிற்காலத்தில் எல்ஆர்டி குறித்த சில பாதுகாப்பு அம்சங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
இது தூர நோக்கு அடிப்படையில் மலேசிய இரயில் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும் எனவும் அமைச்சர் சொன்னார்.


