Homeஉலகம்ஸ்பெயின் அனைத்துலகப் பொதுப் பூப்பந்து போட்டியில் கிசோனா வெற்றி ! மூன்று பட்டங்களை வென்றது மலேசியா...

ஸ்பெயின் அனைத்துலகப் பொதுப் பூப்பந்து போட்டியில் கிசோனா வெற்றி ! மூன்று பட்டங்களை வென்றது மலேசியா !

மெட்ரிட் | ஜூன் 20:-

மலேசிய இந்தியப் பூப்பந்து தாரகை கிசோனா ஸ்பெயினில் நடந்த அனைத்துலகப் பொதுப் பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இறுதி ஆட்டத்தில் கோ ஜின் வெய் எனும் மற்றொரு மலேசிய ஆட்டக்காரரைச் சந்தித்த கிசோனா, அவரை 31 நிமிடங்களில் 21 – 14, 21 – 19 எனும் நேரடி செட்களில் தோற்கடித்தார்.

2019ஆம் ஆண்டு சீ விளையாட்டு பூப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிசோனா தற்பொழுது இரண்டாம் முறையாக உலக வெற்றியாளராகியுள்ளார்.

இதனிடையே, அதே போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட தீ காய் வுன் – தியோ மெய் ஸிங் இணையர் இங்கிலாந்தின் கெல்லம் ஹெம்மிங் – ஜெசிக்கா பக் இணையரை 21-15, 13-21, 21-19 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர். அவ்வாட்டம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் ஏறத்தாழ 50 நிமிடங்கள் வரை அது நோடித்தது.

Final - Tee Kai Wun/Teoh Mei Xing (MAS) vs Callum Hemming/Jessica Pugh  (ENG) - YouTube

தீ காய் வுன்னுக்கு இம்முறை இரட்டை வெற்றியாக ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் கிடைத்துள்ளது. மான் வெய் சோங்குடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட தீ காய் வுன் பிரான்ஸ் நாட்டின் லூக்கஸ் கோர்வீ – ரோனன் லபார் இணையரை 21-15-21-18 எனும் நேரடி செட்களில் வீழ்த்தி வெற்றியாளர்களாக திகழ்ந்தனர்.

spot_img

latest articles

explore more