ஜோர்ஜ்டவுன் | ஜூன் 20:-
வருமானமின்றி தவிக்கும் முடிதிருத்தும் நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென பினாங்கு முடிதிருத்த கடை தொழிலாளர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வருமானமின்றி அவதியுறும் தொழிலாளர்களின் நிலைமைகளை அறிந்து மீண்டும் கடைகளை திறப்பதற்கு அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டுமென பினாங்கு முடிதிருத்த கடை தொழிலாளர்கள் சார்பாக சோமசுந்தரம் லத்திஸ்வேலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் முடிதிருத்தும் நிலையங்களை நடத்தும் எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் பி 40 சேர்ந்தவர்களாவர். முடி திருத்தும் சேவை சமூகத்தில் முக்கியமானது என கருதப்படுவதால் , தேசிய பாதுகாப்பு மன்றம் நல்ல முடிவை எடுக்க அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார் .
ஜூன் 1ஆம் நாள் முதல் நாட்டில் உள்ள அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் பிகேபியால் மூடப் பட்டிருப்பதால் அதன் உரிமையாளர்கள் , தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என சோமசுந்தரம் மேலும் கூறினார்.
– நன்றி : தினஒளி


