கோலாலம்பூர் | 1/7/2021 :-
கடந்த 30 ஆண்டுகளாகச் செயலபட்டு வந்த இஸ்தானா தங்கும் விடுதி எதிர்வரும் 1/9//2021 முதல் தனது செயல்பாட்டினை நிறுத்திக் கொள்ள உள்ளது.
கடந்த 30/6/2021 ஆம் நாள் கையொப்பமிடப்பட்ட அறிக்கை இன்றை அதன் தலைமை நிர்வாகியான நோராசுடின் ஓமார் இன்று வெளியிட்டார்.
பல கோணங்களில் சிந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இராஜா சூலான் சாலையில் அமைந்துள்ள இந்தத் தங்கும் விடுதியில் 486 அறைகள் உள்ளன.

தற்போதையச் சூழலில் அருகாமையில் பல விடுதிகள் உருவாகி விட்டதல் போட்டித்தன்மை கொண்ட இந்தத் துறையில் இஸ்தானா தங்கும் விடுதி தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.
மேலும், கோவிட்-19 பெருந்தொற்றால் தனிமைப்படுத்தல் சேவையை வழங்கும் விடுதிகளைத் தவிர இதரப் பல விடுதிகள் பெரும்பாதிப்பைச் சந்தித்துள்ளன.
Tradewinds Corp Berhad நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இஸ்தான தங்கும் விடுதி, நாட்டில் உள்ள பெரிய விடுதிகளில் ஒன்றாகும். மேலும், இந்த நிறுவனத்திற்கு பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதி, ஹில்டன் கூச்சிங், முத்தியாரா ஜோகூர் பாரு போன்ற 7 சொகுசு விடுதிகள் உள்ளன.
இதில் குறிப்பாக, , முத்தியாரா ஜோகூர் பாரு கடந்த மே மாதம் மூடப்பட்டது.


