Homeமலேசியாபிகேபிடி : உதவி தேவைப்படுவோரை சிலாங்கூர் காவல்துறை அடையாளம் காணும் !

பிகேபிடி : உதவி தேவைப்படுவோரை சிலாங்கூர் காவல்துறை அடையாளம் காணும் !

ஷா ஆலாம் | 3/7/2021 :-

சிலாங்கூரின் பல பகுதிகளில் நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கபட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பண நெருக்கடியால் உதவிகள் தேவைப்படுவோரை  இன்று முதல் சிலாங்கூர் காவல்துறை அடையாளம் காணும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகம்மட் இது குறித்து தெரிவிக்கயில், ஒவ்வொரு காவல் நிலையத் தலைவருக்கும் இது குறித்து ஆணையிடப்பட்டிருப்பதாகவும் உணவுப் பொருள் தட்டுப்பாடு, உளவியல் பிரச்சனைகள், இதர பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டார்.

அடையாளம காணாப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்டத் துறைகளுக்கும் இலாகாக்களுக்கும் அவ்விவகாரத்தைக் கொண்டு செல்லப்படும் என அவர் கூறினார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் வீட்டில் வெள்ளைக் கொடியை பறக்கவிடுவோருக்கு எப்படி உதவிகள் கொண்டு செல்லப்படும் என்பது குறித்துன் வினவியபோது, பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களை எந்நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என அர்ஜுனைடி குறிப்பிட்டார்.

அண்டை அயலார் இது போல் பிரச்சனைக்குள்ளாகி இருந்தால், எங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரியுங்கள். நாங்கள் உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வோம்.

பண உதவியோ, ஆலோசனைகளோ அல்லது இதர உதவுகளானாலும் தங்களால் இயன்ற உதவியை உடனடியாகச் செய்வோம் என அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more