Homeமலேசியாநாளை முதல் தேசிய மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறும் பினாங்கு !

நாளை முதல் தேசிய மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறும் பினாங்கு !

கோலாலம்பூர் | 6/7/2021 :-

நாளை முதல் தேசிய மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு பினாங்கு மாநிலம் மாற்றம் காணும் என பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

பெர்லிஸ், கிளாந்தான், திரங்கானு, பகாங், பேரா ஆகிய மாநிலங்கள் நேற்று தேசிய மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாற்றம் கண்டுள்ள வேளையில், நாளை பினாங்கு அந்த வரிசையில் இணையும்.

தேசிய மீட்சித்திட்டத்தின் முக்கிய மூன்று வரையறைகளை பினாங்கு மாநிலம் அடைந்துள்ள நிலையில் அதை அடிப்படையாகக் கொண்டு தேசியப் பாதுகாப்பு மன்றம் இம்முடிவை எடுத்துள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அந்த மூன்று வரையறைகள் பின்வருமாறு :

  • மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் 100,000 பேருக்கு 9.5 நேர்வுகள் (குறைந்தது 100,000 பேருக்கு 12.2 நேர்வுகள்)
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் பயன்பாடு மிதமான அளவில் இருக்க வேண்டும்.
  • மாநில மக்கள் தொகையில் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ள பெரியவர்களின் எண்ணிக்கை 10.1% (குறைந்தது 10%)
spot_img

latest articles

explore more