HomeமலேசியாHTAR மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே தற்காலிகப் படுக்கைகள் !

HTAR மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே தற்காலிகப் படுக்கைகள் !

கிள்ளான் | 7/7/2021

இன்று காலையில் இங்குள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியில் சில படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

அங்கு போடப்பட்டுள்ள படுக்கைகளை நீல நிற நெகிழிப் பைகளால் மூடப்பட்டு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் அவசியமான வேலை கொண்ட நபர்களும் வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

வெளியில் போடப்பட்டுள்ள படுக்கைகளில் இருப்பவர்கள் கோவிட்-19 தொற்று கண்டிருப்பவர்களாகவும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்படக் காத்திருப்பதாகவும் அறியப்படுகிறது.

இச்சூழல் நேற்று தொடங்கி ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில் ஏறத்தாழ 10 பேர் அந்தத் தற்காலிகப் படுக்கைகள் இருந்தனர்.

சிலாங்கூரில் கோவிட்-19 பரிசோதனை செய்யும் 12 மருத்துவமனைகளில் தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையும் ஒன்று.

spot_img

latest articles

explore more